பதிவு செய்த நாள்
29
அக்
2019
03:10
சிதம்பரம் : தில்லைக் காளியம்மன் கோவிலில் இரவு நடந்த அமாவாசை அர்த்தஜாம பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிதம்பரம் தில்லைக்காளி அம்மன் கோவிலில் அமாவாசை அர்த்தஜாம அபிஷேக மண்டலி சார்பில், ஐப்பசி மாத அமாவாசையையொட்டி, சிறப்பு அர்த்தஜாம பூஜை, மகா அபிஷேகம், விநாயகர் மற்றும் பிரம்மசாமுண்டி அம்மனுக்கு நெய் தீப வழிபாடு நடந்தது.தில்லைக்காளி அம்மனுக்கு நல்லெண்ணெய் அபிஷேக தைலக் காப்பு, பால், தயிர், மற்றும் குளிர்ச்சியான பொருள்கள், பழம், வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது. தில்லைக் காளியம் மனுக்கு வெண்பட்டு சாற்றி, வெட்டிவேர், விளாமுச்சி வேர், செவ்வரளி பூக்களால் சிறப்பு அலங்காரத்தில், அர்த்தஜாம பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.