பதிவு செய்த நாள்
29
அக்
2019 
03:10
 
 புதுச்சத்திரம் : சேந்திரக்கிள்ளை குபேரமூர்த்தி கோவிலில், லட்சுமி குபேர யாகம்  நடந்தது.
திருமண தடை அகலவும், வீட்டில் சுபிட்சம் தழைக்கவும் வேண்டி, புதுச்சத்திரம்  அடுத்த சேந்திரக்கிள்ளை குபேரமூர்த்தி கோவிலில், ஆண்டுதோறும் தீபாவளி  அன்று, லட்சுமி குபேர யாகம் நடப்பது வழக்கம். அதேபோல், நேற்று முன்தினம் 27ல்,  லட்சுமி குபேர யாகம் நடந்தது.அன்று மாலை 4.00 மணிக்கு திருமண தடை  பரிகார ஹோமம், லட்சுமி பூஜை, பூர்ணாஹூதி, தீபாராத னை நடந்தது.  தொடர்ந்து பால், தயிர், பழம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக  ஆராத னை, மாலை 6.30 மகாதீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள்  பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.