பதிவு செய்த நாள்
29
அக்
2019 
03:10
 
 உடுமலை:உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கந்தசஷ்டி, சூரசம்ஹார  திருவிழா, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் நேற்று 28ம் தேதி துவங்கியது.
கோவிலில், வள்ளி, தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி சன்னதி உள்ளது. கந்தசஷ்டி, சூரசம்ஹார திருவிழாவையொட்டி, நேற்று, அபிஷேகம், யாகசாலை வேள்வி, திரவியாகுதி, பூர்ணாகுதி, பாலிகை இடுதல், காப்பு கட்டுதல், மகா தீபாராதனை ஆகிய சிறப்பு பூஜைகள் நடந்தது. நாளை காலை 7:00 மணி முதல் வேள்வி பூஜை, சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் உட்பட சிறப்பு பூஜைகள்  நடக்கிறது.குருப்பெயர்ச்சி விழா முத்தையா பிள்ளை லே-அவுட் சக்திவிநாயகர்  கோவிலில், நேற்று குருப்பெயர்ச்சி விழா நடந்தது. 
பல்வேறு ஹோமங்களுடன், குருப்பெயர்ச்சி அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. இன்று 29ம் தேதி, கோவிலில், குருப்பெயர்ச்சி விழாவையொட்டி, காலை 6:00 மணி முதல், கணபதி ஹோமம், தட்சிணாமூர்த்தி, குருபகவான் ஹோமம் நடக்கிறது.தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு, தட்சிணாமூர்த்திக்கும், குருபகவானுக்கும், அனைத்து வித அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடக்க உள்ளது.