பதிவு செய்த நாள்
01
நவ
2019
03:11
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள, எர்ரகெட் கிராமத்தில், வீரபத்திர சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா கடந்த, 29ல் துவங்கியது. அன்று மாலை, 6:00 மணி க்கு கங்கா பூஜை, கணபதி ஹோமம், உள்ளிட்டவை நடந்தன. நேற்று முன்தினம் 30 ல், அதி காலை, 5:30 மணிக்கு ருத்ர ஹோமமும், காலை, 9:00 மணிக்கு வீரபத்திர சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம், இரவு, 8:00 மணிக்கு கோலாட்டம், சேவாட்டம், கரகாட்டம் ஆகியவை நடந்தன. நேற்று 31ம் தேதி காலை பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில்
ஏராளமான பக்தர்கள், தங்கள் தலை மீது, பூசாரி தேங்காய் உடைக்க, நேர்த்திக்கடன் செலுத் தினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தேவகுல பெருமக்கள், விழா குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.