பதிவு செய்த நாள்
01
நவ
2019
03:11
திருத்தணி:நகராட்சிக்கு, திருத்தணி கோவில் நிர்வாகம், 16.34 லட்சம் ரூபாய், சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது.
திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான, 108 கடைகள், மூன்று தேவஸ்தான விடுதிகள், கோவில் பணியாளர்கள் குடியிருப்பு, 10 உபகோவில்கள், தலைமை அலுவலகம் ஆகியவை திருத்தணி நகராட்சியில் உள்ளது.இதற்கு ஆண்டுதோறும், கோவில் நிர்வாகம் இருமுறை சொத்து வரி மற்றும் தொழில் வரி செலுத்தி வருகிறது.அந்த வகையில், 2018 - -20 வரை நகராட்சிக்கு, கோவில் நிர்வாகம், 16 லட்சத்து, 34 ஆயிரத்து, 233 ரூபாய் சொத்து வரி மட்டும் செலுத்த வேண்டும்.நகராட்சி நிர்வாகம் பலமுறை சொத்து வரி செலுத்துமாறு பரிந்துரை கடிதங்கள் அனுப்பியும், எவ்வித நடவடிக்கை இல்லாமல் நிலுவை வைத்து உள்ளது.
இது குறித்து நகராட்சி ஆணையர் கூறியதாவது:முருகன் கோவில் நிர்வாகம் சொத்து வரி பாக்கி வைத்துள்ளது.மேலும், ஆடிக்கிருத்திகை மற்றும் டிச. 31ம் தேதி நடைபெறும் திருப் படித் திருவிழாவின் போது, நகராட்சி நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வதற்கு, 15 லட்சம் ரூபாய் ஒவ்வொரு முறையும் செலவு ஆகிறது.ஆனால், கோவில் நிர்வாகம் வெறும், 7 லட்சம் ரூபாய், மட்டுமே வழங்குகிறது.இதனால், நகராட்சியில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.