Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேனி வியர்த்த சிக்கல் ... ஒரு கிராமமே திருப்பதிக்கு புனித பயணம் ஒரு கிராமமே திருப்பதிக்கு புனித ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரநாதர் கோவிலுக்கு அறிவிப்பு பதாகை வைத்தது நிர்வாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஏகாம்பரநாதர் கோவிலுக்கு அறிவிப்பு பதாகை வைத்தது நிர்வாகம்

பதிவு செய்த நாள்

02 நவ
2019
11:11

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், மனைகள், கட்டடங்களை பயன்படுத்துவோர், 48 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அறிவிப்பு பதாகைஇந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், மனைகள் மற்றும் கட்டடங்கள், சென்னை, காஞ்சிபுரம் உட்பட, சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ளன.இந்த நிலங்களை அனுபவித்து வருவோர், அதற்கான வாடகையை, கோவில் நிர்வாகத்திற்கு முறையாக செலுத்தவில்லை. இதனால், கோவிலுக்கு தரவேண்டிய வாடகை பாக்கியாக, சென்னையை சேர்ந்தோர், 47.68 கோடி ரூபாய்; காஞ்சிபுரத்தில் வசிப்போர், 35 லட்சம் ரூபாய் என, மொத்தம், 48.03 கோடி ரூபாய் நிலுவை வைத்திருப்பதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது சம்பந்தமாக, வாடகை பாக்கி வைத்துள்ளோரின் பெயரை, பேனரில் அச்சிட்டு, ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்தில், அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, கோவில் செயல் அலுவலர் முருகேசன் கூறியதாவது:கோவில் பதிவேட்டில் உள்ளபடி, நிலங்களை அனுபவித்து வருவோர், செலுத்த வேண்டிய வாடகை பாக்கியை மட்டும் வெளியிட்டுஉள்ளோம். அரசு மதிப்பின்படி, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள், சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளன.

அதிரடி தீர்ப்பு தவிர, கோவிலை சுற்றியுள்ள மாடவீதி மற்றும் காஞ்சிபுரம் நகரில் உள்ள கடைகளுக்கு, வாடகை பாக்கி செலுத்த வேண்டிய வர்களும் உள்ளனர். அவர்களின் பட்டியலையும் தயாரித்து வருகிறோம். இன்னும் சில நாட்களில், அதன் விபரம் குறித்து, அறிவிப்பு பதாகை வைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார். ஏகாம்பரநாதர் கோவில் மாட வீதியை சுற்றிலும், 170 வீடுகள் உள்ளன.

இந்த வீடுகளில் வசிப்போர், வசிப்பிடம் எங்களுக்கு சொந்தம் என, 2010ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை, 2018ல் முடிந்தது. கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை, யாரும் உரிமை கொண்டாட முடியாது என, அதிரடியாக, நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar