மும்பை: வடமாநிலத்தவர்கள் ஆண்டு தோறும் சாத் என்ற பெயரில் மிகவும் பிரபலமான ஒரு விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். விரதம் இருப்பது மூலம் வாழ்க்கையில் மிகச்சிறந்த புண்ணியங்களை பெற முடியும் என, வடமாநில மக்கள் நம்புகின்றனர். குறிப்பாக, பீகார் மாநிலத்தில், சாத் விரதம் அதிகமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் சாத் பண்டிகையையொடி, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை, பீஹார் மாநிலம் பாட்னாவில் பொதுமக்கள் கொப்பரை தேங்காய், கரும்பு, வெள்ளை முள்ளங்கி, இனிப்பு, மலர், முளைவிட்ட தானியம் எடுத்துக்கொண்டு சூரிய வழிபாடு செய்தனர்.