Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரோகரா கோஷம் முழுங்க ... மும்பை, பாட்னாவில் சாத்கோலாகலம் மும்பை, பாட்னாவில் சாத்கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்: கடற்கரையில் பக்தர்கள் வெள்ளம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்: கடற்கரையில் பக்தர்கள் வெள்ளம்

பதிவு செய்த நாள்

03 நவ
2019
12:11

துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷத்திற்கு இடையே, சூரசம்ஹார விழா, கோலாகலமாக நடந்தது.

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவதாகும். இங்கு கந்த சஷ்டி திருவிழா, அக்., 28ல் துவங்கியது.விரதம்ஏராளமான பக்தர்கள், கோவில் வளாகத்தில் தங்கி, விரதத்தை துவக்கினர்.  சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. டர்ந்து, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.காலையில், யாகசாலையில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார்.  சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சுவாமி, அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, சண்முகவிலாச மண்டபத்தில் காட்சியளித்தனர். பின், சுவாமி ஜெயந்திநாதர் அலங்காரத்துடன், சூரசம்ஹாரத்திற்கு தயாரானார்.நேற்று பிற்பகல், 2:30 மணிக்கு, சிவன்  கோவிலில் இருந்து, படை பரிவாளங்களோடு, சூரபத்மன் கடற்கரைக்கு கிளம்பினார். மாலை, 4:30 மணிக்கு, சூரசம்ஹாரம் நிகழ்வு துவங்கியது.

கோஷமிட்டனர்: ஏராளமான பக்தர்கள் முன்னிலையில், கஜமுக சூரனை, ஜெயந்திநாதர் வதம் செய்தார். தொடர்ந்து சிங்கமுகசூரனாகவும், பின், சுயரூபமான சூரபத்மனாகவும் வந்த சூரனை, ஜெயந்திநாதர் வதம் செய்தார்.இதைதொடர்ந்து சேவலாகவும், மாமரமாகவும்  போரிட்ட சூரனை, முருகப்பெருமான் ஆட்கொண்டார். கடற்கரையில் திரண்டிருந்த பக்தர்கள், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என, கோஷமிட்டனர். பக்தர்கள் கடலிலும், நாழிக்கிணற்றிலும் நீராடி, விரதத்தை நிறைவு செய்தனர். தொடர்ந்து ஜெயந்திநாதர், சந்தோஷ  மண்டபத்தில் காட்சிஅளித்தார்.இன்று இரவு, சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.டி.ஜி.பி., திரிபாதி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆதிகேசவலு, சுந்தர், புகழேந்தி, அமைச்சர்கள் ராஜூ, உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, அறநிலையத்துறை  முதன்மை செயலர் பனீந்திரரெட்டி, துாத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்துாரி உள்ளிட்டோர், கந்த சஷ்டி விழாவில் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar