பதிவு செய்த நாள்
03
நவ
2019
01:11
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் நிறையாக சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவாக நேற்று காலை 6:00 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், 9:00 மணிக்கு முருகப்பெருமான் சன்னதியில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, ஹோமம், பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி மூலவர் வள்ளி தேவசேனா முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் ,தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை, அர்ச்சனை, உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி வீதியுலா நடந்தது. இரவு 8:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சூரசம்ஹார வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.