பதிவு செய்த நாள்
04
நவ
2019
02:11
வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி திருவிழாவின் இறுதி நாளான நேற்று (நவம்., 3ல்), திருக்கல்யாண உற்சவம் நடந்தது.மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப்பெருமானின் ஏழாம் படைவீடாக கருதப்படுகிறது.
இக்கோவிலில், கடந்த 28ம் தேதி காப்பு கட்டுதலுடன், கந்தசஷ்டி திருவிழா துவங்கியது. நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில், சிறப்பு பூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. ஆறாம் நாள், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நடந்தது.கந்தசஷ்டி திருவிழாவின் இறுதி நாளான நேற்று (நவம்., 3ல்) காலை, 10:00 மணிக்கு வள்ளி, தெய்வானை யுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு, திருகல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது.அதன்பின், வள்ளி, தெய்வானை சமேதரராய் சுப்பிரமணிய சுவாமி திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருக்கல்யாணத்தில் பக்தர்கள் செலுத்திய மொய் பணம், 77,936 ரூபாய் வசூலானது. திருக்கல் யாணத்திற்குப் பின், பக்தர்களுக்கு திருமஞ்சள் கயிறு பிரசாதம் வழங்கப்பட்டது.அதன்பின், கடந்த, ஏழு நாட்களாக விரதமிருந்து வந்த பக்தர்கள், தங்களின் விரதத்தை நிறைவு செய்தனர்.