பதிவு செய்த நாள்
04
நவ
2019
02:11
கோவில்பாளையம்:கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி விழாவில் நேற்று (நவம்., 3ல்) திருக்கல்யாண உற்சவம் நடந்தது.கவுசிகாபுரி என்றழைக்கப்படும் கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவில் பழமையானது.
இங்கு காலசுப்பிரமணியர் சன்னதியில், கடந்த, 28ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்கியது. நவ., 1ம் தேதி வரை, தினமும் காலையில், அபிஷேக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் (நவ., 2ல்) காலையில் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, கரட்டுமேடு, ரத்தினபுரி கோவி லில், வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாலையில், காலசுப்ரமணியர் எழுந்தருளி, கஜமுகா சூரனையும், சிங்கமுகாசூரனையும் சம்ஹாரம் செய்து, சூரபத்மனை ஏற்று, அருளினார். இதை தொடர்ந்து, இரவு சிறப்பு வேள்வியும், அபிஷேக பூஜையும், சுவாமி திருவீதியுலாவும் நடந்தது. நேற்று (நவ., 3ல்), காலையில், மூலவருக்கு அபிசேக பூஜை நடந்தது. இதையடுத்து, வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் மயில்வாகனத்தில், வள்ளி, தெய்வானை யுடன் சுப்ரமணியர் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.