பதிவு செய்த நாள்
04
நவ
2019
02:11
அலகுமலை: பொங்கலூர் அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த மாதம், 28ம் தேதி துவங்கியது. பக்தர்கள் காப்பு அணிந்து, விரதம் இருந்து முருகப் பெருமானை தரிசித்தனர். தொடர்ந்து தரிசனம், கந்த சஷ்டி பாராயணம், அபிஷேகம், மகா தீபாராதனை, பஜனை, கூட்டு பிரார்த்தனை உள்ளிட்டவை நடந்தது. நேற்று முன்தினம் (நவ., 2ல்)முருகப்பெருமான் தன் தாயார் பார்வதி தேவியிடம் வாங்கிய சக்திவேல் கொண்டு சூரனை வதம் செய்யும் நிகழ்வான சூரசம்ஹார விழா நடந்தது.
பின், பக்தர்கள் காப்பு அவிழ்த்து விரதம் முடித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. கந்த சஷ்டி திருவிழாவின் இறுதி நாளான நேற்று (நவ., 3ல்), மலர்களால் அலங் கரிக்கப்பட்ட மணமேடையில் வள்ளி - தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி, சிவாச்சாரி யார்களின் வேத மந்திர முழக்கத்துடன் விமரிசையாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ’முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றி வேல்’ என்று கோஷம் எழுப்பினர். பின்னர் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண விருந்து நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கந்த சஷ்டி விழா குழுவினர் செய்திருந்தனர்.