புதுச்சேரி: முதலியார்பேட்டை முத்துக்குமரசாமி கோவிலில் நேற்று ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முதலியார்பேட்டை வெள்ளாழ வீதியில் உள்ள முத்து விநாயகர் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமரசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 28 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. கடந்த 2ம் தேதி காலை 9.00 மணிக்கு சிறப்பு தீபாரதனை நிகழ்ச்சியும், இரவு 7.00 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று மாலை 7.00 மணிக்கு முத்துக்குமரசாமி வள்ளி தெய்வானை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி முத்துக்குமரசாமிக்கு சிறப்பு அபி ஷேகம் ஆராதனைகள் நடந்தது. இன்று இரவு 7.00 மணிக்கு கொடி இறக்குதல் மற்றும் உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு செயலர் நாகராஜன் செய்து வருகிறார்.