ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மணவாளமாமுனிகள் சன்னதியில் பிள்ளைலோகாச்சாரியர் திருநட்சத்திர உற்ஸவத்தை முன்னிட்டு சடகோபராமானுஜ ஜீயர் தலைமையில் பிள்ளைலோகாச்சாரியருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆண்டாள் சன்னதியில் கற்பூர ஆரத்தியும், மாடவீதிகள் சுற்றி வர பெரியாழ்வார், பெரியபெருமாள் சன்னதிகளில் மங்களாசாசனம், மடத்தில் எழுந்தருளிய லோகாச்சாரியருக்கு சாத்து முறை, கோஷ்டி, சேவாகாலம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.