பதிவு செய்த நாள்
05
நவ
2019
12:11
மாமல்லபுரம் : மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார உற்சவம், அக்டோபர், 27ம் தேதி துவங்கியது. தினமும், திருமஞ்சனம், சுவாமி வீதியுலா, திருப்பாவை, திருவாய்மொழி சாற்றுமுறை சேவைகள் என நடந்தன. ஒன்பதாம் நாள், முக்கிய உற்சவமான நேற்று, பூதத்தாழ்வார், தேரில் வீதியுலா சென்றார்.கோவிலில், காலை வழிபாட்டைத் தொடர்ந்து, அலங்கார பூதத்தாழ்வார், திருத்தேரில் எழுந்தருளினார்.அவருக்கு, ஸ்தலசயன பெருமாள் பரிவட்ட மரியாதை அளித்து, நைவேத்யம் படைத்த பின், வழிபாடு நடந்தது.தொடர்ந்து, பக்தர்கள், காலை, 9:00 மணிக்கு, தேரை வடம்பிடித்து, கோவிந்தா... கோவிந்தா... என, முழக்கமிட்டபடி, மாடவீதிகளில் வலம் வந்தனர்.ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகம், தேர் உற்சவம் நடத்தி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியது.