பதிவு செய்த நாள்
05
நவ
2019
12:11
திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கந்த சஷ்டி உற்சவம், திருக்கல்யாண வைபவத்துடன், நேற்று முன்தினம் நிறைவடைந்தது.காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், அக்டோபர், 28ம் தேதி, கந்த சஷ்டி விழா துவங்கியது.இதன் பிரதான விழாவான சூரசம்ஹார விழா, நேற்று முன்தினம் நடந்தது. உற்சவர் கந்தசுவாமி, தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, கந்தசுவாமி - தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடந்ததை தொடர்ந்து, சஷ்டி விழா நிறைவடைந்தது.