திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த ஆமூரில், திரிபுரசுந்தரி சமேத இறையாயிரமுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில், செப்டம்பர் மாதம், கும்பாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து கிராமத்தினர், தினமும் காலை, சுவாமிக்கு மண்டலாபிஷேகம் செய்து வந்தனர். 48 நாள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சுவாமிக்கு மலர் அர்ச்சனை நடந்தது.மேலும், 5 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் மற்றும் நுழைவாயில் கதவு, நேற்று (நவம்., 4ல்) திறக்கப் பட்டது.