பதிவு செய்த நாள்
05
நவ
2019
02:11
செங்கல்பட்டு: வ.உ.சி., தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இங்கு, வள்ளி, தெய்வானை சமதே சுப்ரமணி சன்னிதியில், 2ம்தேதி, சூரசம்ஹாரம் நடைபெற்றறு.
தொடர்ந்து, நேற்றுமுன்தினம் (நவம்., 3ல்) இரவு, வள்ளி தெய்வானையுடன், சுப்ரமணிய சுவாமி க்கு, திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோல், சக்தி விநாயகர் கோவிலில், வள்ளி, தெய்வானையுடன், கல்யாண சுப்ர மணி சுவாமி மற்றும் கைலாசநாதர் கோவிலில், வள்ளி, தெய்வானையுடன் சுப்ர மணி சுவாமி க்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.