ராஜபாளையம்: ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் பாலம் வசதி இல்லாமல் மழைக் காலங்களில் இதை கடப்பதில் பக்தர்கள் பெரும் சிரமம் கொள்வதோடு, ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வசதிக்காக ஏங்கும் நிலையும் தொடர்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் பாலாறு, நீராறு என இரு ஆறுகள் சங்கமி த்து வரும் ஆற்றின் ஓரம் அமைதியான சூழ்நிலையில் ராஜபாளையத்தில் அய்யனாருக்கு கோயில் அமைந்துள்ளது.
மலையில் மழை பெய்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்த காலத்தில் ராஜபாளையம் பகுதி பாதிக்காமல் இருக்கவும், அதேநேரம் விவசாயம் செழிக்கவும், குடிநீர் பிரச்னையை தீர்க்கவும் அருளியதால் இவர் நீர்காத்த அய்யனார் என அழைக்கப்படுகிறார்.
350 ஆண்டுகளுக்கு முன் உருவான இக்கோயிலின் கடவுளான நீர்காத்த அய்யனார் பல சமுதாய மக்களுக்கு குலதெய்வமாகவும் சவிளங்கி வருகிறார். மழையின் போது பெருக்கெடு க்கும் நீரில் குளிக்க பெரும்பாலான மக்கள் இப்பகுதிக்கு வந்துசெல்கின்றனர்.
திருமணம், மொட்டை, காது குத்துதல் போன்ற அனைத்து சுப காரியங்களுக்கும் அய்யனா ரை தேடி பக்தர்கள் வருகின்றனர்.
ஆனால் இங்கு வரும் பக்தர்களுக்கு தகுந்த அடிப்படை வசதி இல்லை. மழையில்லாத நேரங்களில் ஆறு வறண்டு போகும்.அப்போது பக்தர்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட நீரின்றி அல்லல் படும் நிலை உள்ளது.
மழை காலங்களில் இங்குள்ள ஆற்றில் குளிக்கு வரும் பெண்கள் உடைமாற்றும் வசதியி ன்றி பெரும் சிரமம் படுகின்றனர்.இதன் காரணமாகவே குளித்துவிட்டு ஈரமான உடையுடனே திரும்பி செல்லும் சூழல் ஏற்படுகிறது.
ஆற்றை கடந்து கோயிலுக்கு செல்வதற்காகபாலம் அமைக்க ரூ. 13 லட்சம் நிதி ஒதுக்கப் பட்ட நிலையில், வனத்துறை ஒப்புதல் இன்மையால் நிதி திருப்பி அனுப்பப்பட்டது.பாலம் பணியும் கிடப்பில் உள்ளது. இப்படிதான் இங்கு எவ்விதி வளர்ச்சி பணியின்றி மக்கள் பாதிப் புகளை சந்திக்கின்றனர்.