எரிகோ நகருக்கு இயேசு வந்த போது அவரைக் காண மக்கள் காத்திருந்தனர். சகேயு என்பவனும் அங்கு நின்றிருந்தான். தன்னால் காண முடியாமல் போகுமோ என்ற வருத்தத்தில் ஒரு மரத்தின் மீது ஏறினான். அதன் அருகில் வந்ததும், ”சகேயு! சீக்கிரம் இறங்கு. உன் வீட்டில் தான் இன்று தங்கப் போகிறேன்” என்றார் இயேசு. சகேயு மட்டுமின்றி அனைவரும் ஆச்சரியப்பட்டனர். செல்வந்தர் பலர் சூழ்ந்திருக்க, ஏழையின் வீட்டில் தங்குகிறாரே...என எண்ணம் அவர்களுக்கு உண்டானது. முன்பின் அறியாவிட்டாலும் ஆண்டவர் அன்பு காட்டியதை எண்ணி சகேயு கண்ணீர் சிந்தினான்.