ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற தலங்கள் மலைக்கோயிலாகவும் உள்ளன. ஆனால் திருச்செந்துாரும் மலைக்கோயிலே. கடற்கரையில் இருக்கும் ’சந்தனமலை’யில் தான் கோயில் இருந்தது. எனவே இத்தலத்தை, ’கந்தமாதன பர்வதம்’ என்பர். தற்போதும் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறுகுன்றாக இருப்பதைக் காணலாம்.