அசுரர்களை வதம் செய்யும் முன் குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை எடுத்துச் சொன்னார். எனவே திருச்செந்துார் ’குரு தலமாக’ கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகம், அஷ்ட யானை, மேதா மலை என நான்கு ஆசனங்கள் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் வேதங்கள் கிளி வடிவில் உள்ளன. திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குருவினால் உண்டாகும் தீமை குறையும். ஏனெனில் திருச்செந்துார் முருகன் ’ஞானகுரு’வாக அருள்புரிகிறார்.