சிதம்பரம்: ராஜராஜசோழன் சதய விழாவையொட்டி, திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் கோவிலில் உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிதம்பரம் அடுத்த திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் கோவில் சன்னதியில், ராஜராஜ சோழனுக்கு நம்பியாண்டார் நம்பி சிலைக்கு அருகில், சிலை அமைத்து வழிபட்டு வருகின்றனர். ராஜராஜ சோழன் சதய விழாவையொட்டி, திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் சன்னதியில், வெங்கடேச தீட்சிதர் தலைமையில் சிறப்பு யாகம் நடந்தது. பொல்லாப்பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, நடைபெற்றது. தொடர்ந்து ராஜராஜசோழன் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.