கம்பம், கம்பம் புதுப்பட்டி கவுமாரியம்மன் கோயில திருவிழா ஒரு வாரமாக நடைபெற்று நேற்று மாலை வண்டிவஷேத்துடன் நிறைவு பெற்றது.
கம்பம் புதுப்பட்டியில் கவுமாரியம்மன் கோயில் உள்ளது. அனுமந்தன்பட்டி மற்றும் புதுப்பட்டி கிராமங்கள் தலா ஒரு வாரம் இதன் திருவிழா கொண்டாடும் . அதன்படி இந்த கோயில் திருவிழா கடந்த ஒரு வாரமாக புதுப்பட்டியில் நடந்தது. தினமும் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படி நடைபெற்றது. அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். நேற்று முன்தினம் அக்னிசட்டி எடுத்தல், ஆயிரம்கண்பாணை, உருண்டு கொடுத்தல், மாவிளக்கு என பல்வேறு நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப்பட்டன. நேற்று காலை நுாற்றுக்கணக்கில் பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் மாலை ஒக்கலிகர் இளைஞரணி சார்பில் வண்டிவஷே நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி, அம்மன் உள்ளிட்ட வேடமணிந்து வந்தனர். பின்னர் சர்வ அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்தார். ஏராளமானோர் தரிச னம் செய்தனர்.