நாமக்கல்: வெண்ணெய்க்காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அதன்படி குளிர்காலம் துவங்கியதையடுத்து, நடப்பாண்டு, முதல் வெண்ணெய்க்காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.