பதிவு செய்த நாள்
09
நவ
2019
02:11
இடைப்பாடி: இடைப்பாடி, கல்வடங்கம், அங்காளம்மன் கோவில், காவிரி ஆற்றங்கரையோரம் உள்ளது. இக்கோவிலைச் சுற்றி ஏராளமான நிலம், மூன்று ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நீதிமன்ற உத்தரவால், சிவதொண்டர் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன், கோவில் பரம்பரை அறங்காவலர்கள் மகிபாலன், வேலுசாமி முன், நில அளவீடு செய்யும் பணி, நேற்று (நவம்., 7ல்) நடந்தது. அதில், கோவிலுக்கு சொந்தமான இடங்களில் அரசு நூலகம், தாய் சேய் நல விடுதி இருந்தது தெரியவந்தது.
கோவில் வளாகத்திலுள்ள கழிப்பறையை அப்புறப்படுத்த, ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
ராதாகிருஷ்ணன் கூறுகையில், ”கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, பக்தர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யவோ, வேறு நிகழ்ச்சிக்கு பயன்படுத்தவோ கூடாது. மத்திய அரசு நிதி பங்களிப்புடன், கோவில், சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றப்படும்,” என்றார்.