பதிவு செய்த நாள்
10
நவ
2019
07:11
விழுப்புரம் : விழுப்புரம், ஆதிவாலீஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷத்தை யொட்டி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஆதிவாலீஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷத்தை யொட்டி, நேற்று மாலை 4.00 மணிக்கு மேல் நந்தி பகவானுக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட நந்தீஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனையும், 5:30 மணிக்கு மேல், நந்தீஸ்வரர் ஆலய உள்புறப்பாடும் நடந்தது.இதேபோன்று, கள்ளக்குறிச்சி, சிதம்பரேஸ்வரர் கோவில், ஏகாம்பரேஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனுார், தென்கீரனுார் அருணாசலேஸ்வரர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், கனங்கூர் ராமநாதீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர் கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடந்தது.
சின்னசேலம் தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவில், செஞ்சி தாலுகா செத்தவரை மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சி அம்மன் உடனாகிய சொக்கநாதர் கோவில், பீரங்கி மேடு அருணாச்சலேஸ்வரர் கோவில்களிலும்; சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவில், உளுந்துார்பேட்டை கைலாசநாதர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.மேலும், திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவில், மூங்கில்துறைப்பட்டு, கண்டாச்சிபுரம், சங்கராபுரம் பகுதிகளி்ல் உள்ள சிவன் கோவில்களிலும் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.