பதிவு செய்த நாள்
10
நவ
2019
07:11
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த மஹா சனி பிரதோஷத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், நேற்று, மஹா சனி பிரதோஷம் நடந்தது.இதையொட்டி, மாலை, 4:30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு விபூதி, பால், பன்னீர், மஞ்சள், இளநீர் உட்பட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திருவாலங்காடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.இதே போல், திருத்தணி நகரில், நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள வீரட்டீஸ்வரர், பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரர், அகூர், நாபளூர் மற்றும் அருங்குளம் கிராமங்களில் உள்ள அகத்தீஸ்வரர் உள்ளிட்ட, சிவன் கோவில்களில் சனி பிரதோஷம் நடந்தது.