சிவகங்கை:மதகுபட்டி மகாமும்மூர்த்திகள் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் ஒரே சிலையாக சயன கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். இக்கோயில் கும்பாபிஷேகம் யாகசாலையுடன் துவங்கியது. நேற்று 9ம் தேதி காலை 10:00 மணிக்கு ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.