பதிவு செய்த நாள்
11
நவ
2019
03:11
சென்னை: ராஜா அண்ணாமலைபுரம் அய்யப்பன் கோவிலில், நவ., 17ம் தேதி முதல் மண்டல பூஜை துவங்குகிறது.ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில், கார்த் திகை மாதம் முதல் நாளான நவ., 17ம் தேதி முதல், மண்டல பூஜை துவங்கி, டிச., 27ம் தேதி வரை நடக்கிறது.
மண்டல பூஜை காலங்களில் தினமும் மாலை, 6:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இக்கோவிலின் பிரம்மோற்சவம், டிச., 22ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இருமுடி எடுத்து வரும் பக்தர்கள், கார்த்திகை, 1ம் தேதி முதல், 41 நாட்கள், அய்யப்பனுக்கு காலை, 7:00 மணி முதல், 12:00 மணி வரை நெய் அபிஷேகம் செய்து தரிசிக்கலாம்.பதினெட்டாம் படி பூஜையும், சபரிமலை மோகன் தந்திரி குழுவினரால், நவ., 17, டிச., 7, 20, 21, 24, 25, ஜன., 1 தேதிகளில் மாலை, 6:00 மணிக்கு நடத்தப்பட உள்ளன. இவ்வாறு, கோவில் அறங்காவலர் ராமசாமி தெரிவித்துள்ளார்.