பதிவு செய்த நாள்
16
ஏப்
2012
10:04
திருநெல்வேலி:மூலைக்கரைப்பட்டி கோயிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது.மூலைக்கரைப்பட்டி கற்பக விநாயகர் மற்றும் செல்வசுப்பிரமணியன் கோயிலில் சித்திரை விசுவை முன்னிட்டு அன்ன அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கோயில் தர்மகர்த்தாவும், பா.ஜ., மாவட்ட இளைஞரணி பொது செயலாளருமான ராமலிங்கம் தலைமை வகித்தார்.பா.ஜ.,பிரமுகர்கள் குருசங்கர், சண்முகம், ராமசந்திரன் பண்ணையார், கமல், மாரியப்பன், தளவாய், டி.பி.பாண்டியன், வீரபாகு மற்றும் அதிமுக மாவட்ட மாணவரணி துணை செயலாளர் காந்திமதிநாதன், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.