Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிளஸ் பாயிண்ட்டை மட்டும் பாருங்க! கோயிலை சுத்தப்படுத்தினால் நிம்மதி ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புத்திசாலிகளுடன் பழகுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2019
01:11

புத்திசாலிகளுடன் பழகுவது தான் நல்லது. நம்மைச் சேர்ந்தவர்கள் நண்பர்கள், உறவினர்களே ஆயினும் கூட, முட்டாள்தனமான யோசனை சொன்னால், அதைத் தவிர்த்து விட வேண்டும். இல்லாவிட்டால், இந்த வியாபாரிக்கு நேர்ந்த நிலை தான் நமக்கும்! ஒரு வியாபாரியும், அவரது வேலைக்காரனும் அன்றைய வியாபாரத்தை முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இரவு நேரமாகி விட்டதால், ஒரு ஊரில் தங்கி மறுநாள் செல்ல முடிவெடுத்தனர். தங்கும் விடுதிகள் ஏதும் கிடைக்காத நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு மடத்தில் வந்து படுத்தனர். வியாபாரி மண்டபத்தின் உள்ளேயும், வேலைக்காரன் திண்ணையிலுமாகப் படுத்தனர். அப்போது, சில திருடர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவன், இருட்டில் படுத்திருந்த வேலைக்காரனின் காலில் தெரியாமல் மிதித்து விட்டான். அவன் அலறியடித்து எழுந்தான். “ஏய், காலை மடக்கிப் படுக்கக்கூடாதா? நான் ஏதோ கட்டை கிடப்பதாக நினைத்து மிதித்து விட்டேன்,” என்றான் மிதித்தவன்.வேலைக்காரனுக்கு கோபம். “உங்க ஊரிலெல்லாம் கட்டைகள் மடியில் பத்து ரூபாய் கட்டை வைத்துக் கொண்டு படுத்திருக்குமாக்கும்,” என்றான். “ஆகா...இவனிடம் பணம் இருக்கிறது போலிருக்கிறதே” என்று நினைத்தவன், அவனிடமிருந்ததை பறித்துக் கொண்டான்.

திடீரென அவனுக்கு சந்தேகம்.“ஏய்! இதெல்லாம் யாருக்குரியது? நல்ல நோட்டா, கள்ள நோட்டா?” என்று அதட்டினான்.“அதெல்லாம் எனக்கு தெரியாது. <<உள்ளே படுத்திருக்கிறாரே எனது எசமான், இதுஅவருடைய பணம். அவரிடம் போய் அந்த விஷயத்தையெல்லாம் கேட்டுக் கொள்,” என்றான் அந்த அடிமுட்டாள்.வேலைக்காரனிடமே இவ்வளவு பணத்தை கொடுத்து வைத்திருக்கிறார் என்றால், எஜமானனிடம் எவ்வளவு இருக்கும் என்று கணக்கு போட்ட திருடர்கள், உள்ளே சென்று வியாபாரியிடம் இருந்த பணத்தையும் பறித்துச் சென்று விட்டனர்.  இந்த வியாபாரிக்கு வேலைக்காரன் எப்படி சரியாக அமையவில்லையோ, அப்படித்தான் சிலருக்கு நட்பு, உறவு வட்டாரம் சரியில்லாமல் இருக்கிறது. முட்டாள்களின் சேர்க்கையால் தப்பாமல் கேடு வரும். சரி தானே!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
பெங்களூரு குமாரசாமி லே -அவுட்டில் உள்ளது ஸ்ரீ 108 கணேசா கோவில். பெயருக்கு ஏற்றாற் போல, 108 கணேச ... மேலும்
 
temple news
பெங்களூரு கோரமங்களாவில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில். இவரை ‛டெக்கி கணேசா’ எனவும் அழைக்கின்றனர். ... மேலும்
 
temple news
பெங்களூரு கஸ்தூரிபா சாலையில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில், ‛டிராபிக் கணேசா’ கோவில் என கூறினால் ... மேலும்
 
temple news
பெங்களூரு ஜெய நகரில் உள்ளது ஸ்ரீ சக்தி கணேசா கோவில். பழமையான கோவில்களின் ஒன்றாகும். வேலைவாய்ப்புகள் ... மேலும்
 
temple news
பெங்களூரு கே.ஆர்., புரத்தில் உள்ளது ஸ்ரீ கட்டே கணேசா கோவில். மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar