பதிவு செய்த நாள்
14
நவ
2019
12:11
ஈரோடு: திருமலையில், 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட் எடுத்து, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பதி திருமலையில், இலவச தரிசனம் மட்டுமின்றி, 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட்டும் உள்ளது.
நவம்பரில் சுவாமி தரிசனம் செய்ய, கட்டண தரிசன டிக்கெட்டுகள் உள்ளன. ஈரோடு பெருந் துறை ரோட்டில் உள்ள, ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் அலுவலகத்தில், கட்டண தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. நவம்பர் மாதத்தில், பெரும்பாலான நாட்களில் சுவாமியை தரிசனம் செய்ய, தரிசன டிக்கெட்டுகள் உள்ளன. இதை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என, ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட், ஈரோடு பொறுப்பாளர் உமாபதி கேட்டு கொண்டுள்ளார்.