விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் அழகம்மை சமேத ஆலந்துார் ஈஸ்வரர் கோவி லில் அன்னாபிஷேக விழா நடந்தது.
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நடந்த விழாவில், ஈஸ்வரருக்கும், அழகம்மைக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஈஸ்வரருக்கு அன்னம், ருத்ராட்சம் மற்றும் கனிகளால் அலங் கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.மேலும், விக்கிரவாண்டி தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில் அகத்தீஸ்வரர் அன்னாபிஷேகத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.