ராமபிரான் அவதரித்த நாளான இன்று, நாடு முழுவதும் ஸ்ரீராம நவமி என கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் வீட்டிலேயே ராமருக்கு பூஜை செய்யலாம்.பூஜை செய்யும் இடத்தில், சுத்தம் செய்த பலகையை போட்டு வையுங்கள். அங்கே ஹனுமன் வந்து ராம நாமங்களையும், கீர்த்தனைகளையும் கேட்பார்; நமக்கும் ஆசி வழங்குவார் என்பது நம்பிக்கை. துளசி இலை, துளசி மாலை அல்லது தாமரை மலர் பூஜைக்கு இருப்பது அவசியம். பூஜை முடித்து இறுதியில் மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்.
நைவேத்தியம்இது தான்!: சுவாமிக்கு பிரசாதமாக வடை, பருப்பு, நீர் மோர், பானகம் படைக்கலாம். பூஜை செய்ய ஏதேனும் ஒரு பதார்த்தம், பிரசாதம் வைத்து துவங்கலாம்.கம்ப ராமாயண பாடல்நன்மையும் செல்வமும் நாளும் நல்குமேதின்மையும் பாவமும் சிதைந்து தேயுமேசென்மமும் மரணமும் இன்றித் தீருமேஇம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்.