Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தலையெழுத்தை மாற்றும் பரிகாரம்! ராம நவமி: வீட்டிலேயே ராமருக்கு பூஜை செய்யலாம் ராம நவமி: வீட்டிலேயே ராமருக்கு பூஜை ...
முதல் பக்கம் » துளிகள்
ராம நாமம் இருக்க நமக்கு கவலை ஏது...!
எழுத்தின் அளவு:
ராம நாமம் இருக்க நமக்கு கவலை ஏது...!

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
10:04

மனதிற்கினிய ராமனை நினை மனமே!

ஓம் அயோத்தி அரசே போற்றி
ஓம் அருந்தவ பயனே போற்றி
ஓம் அச்சுதானந்த கோவிந்த போற்றி
ஓம் அளவிலா புகழுடையோய் போற்றி
ஓம் அபயம் அளிக்கும் விரதா போற்றி
ஓம் அறத்தின் நாயகனே போற்றி
ஓம் அன்பின் இதயம் உறைவோய் போற்றி
ஓம் அழகிய திருமுகத்தோய் போற்றி
ஓம் அழகு சீதாபதியே போற்றி
ஓம் அகிலமெல்லாம் காப்பாய் போற்றி

ஓம் அச்சம் அகற்றினாய் போற்றி
ஓம் அகலிகை சாபம் தீர்த்தாய் போற்றி
ஓம் அற்புத நாமா போற்றி
ஓம் அறிவுச்சுடரே போற்றி
ஓம் அளவிலா குணநிதியே போற்றி
ஓம் அன்புள்ள ஆரமுதே போற்றி
ஓம் அரக்கருக்கு கூற்றே போற்றி
ஓம் அனுமன் அன்பனே போற்றி
ஓம் அன்பு கொண்டாய் போற்றி
ஓம் அனந்த கல்யாண குணா போற்றி

ஓம் அஸ்வமேத யாக பிரபுவே போற்றி
ஓம் ஆதித்தன் குலக்கொழுந்தே போற்றி
ஓம் ஆற்றல் படைத்தாய் போற்றி
ஓம் ஆதரவில்லார் புகலிடமே போற்றி
ஓம் ஆத்ம சொரூபனே போற்றி
ஓம் ஆதிமூலமே போற்றி
ஓம் இளையவன் அண்ணலே போற்றி
ஓம் இன்சுவை மொழியே போற்றி
ஓம் இகபர சுகம் அளிப்பாய் போற்றி
ஓம் உண்மை வடிவமே போற்றி

ஓம் உத்தம வடிவே போற்றி
ஓம் உலகம் காக்கும் உறவே போற்றி
ஓம் ஊக்கம் தரும் சுடரே போற்றி
ஓம் ஊழி முதல்வா போற்றி
ஓம் எழில் நாயகனே போற்றி
ஓம் ஏழுலகம் காப்பவனே போற்றி
ஓம் ஏழு மரம் துளைத்தவனே போற்றி
ஓம் ஏக பாணப்பிரயோகா போற்றி
ஓம் ஏக பத்தினி விரதனே போற்றி
ஓம் ஐம்புலன் வென்றோய் போற்றி

ஓம் ஒப்பிலா ஒளியே போற்றி
ஓம் ஓம்கார தத்துவமே போற்றி
ஓம் ஓங்கி உலகளந்த அம்சமே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் கருப்பொருளே போற்றி
ஓம் கரனை அழித்தோய் போற்றி
ஓம் காமகோடி ரூபனே போற்றி
ஓம் காமம் அழிப்பவனே போற்றி
ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
ஓம் காலத்தின் வடிவே போற்றி

ஓம் காசி முக்தி நாமா போற்றி
ஓம் குரு பக்த ரத்தினமே போற்றி
ஓம் கோசலை மைந்தா போற்றி
ஓம் கோதண்ட பாணியே போற்றி
ஓம் சங்கடம் தீர்க்கும் சத்குருவே போற்றி
ஓம் சத்ய விக்ரமன் போற்றி
ஓம் சரணாகத வத்சலா போற்றி
ஓம் சபரிக்கு மோட்சம் தந்தாய் போற்றி
ஓம் சொல் ஒன்று கொண்டாய் போற்றி
ஓம் சோலை அழகனே போற்றி

ஓம் சோகம் தீர்ப்பாய் போற்றி
ஓம் தசரதன் தவப்புதல்வா போற்றி
ஓம் தந்தை சொல் கேட்டாய் போற்றி
ஓம் தியாகமூர்த்தியே போற்றி
ஓம் நிலையானவனே போற்றி
ஓம் நித்ய மங்கள வைபவா போற்றி
ஓம் நீலமேக சியாமளனே போற்றி
ஓம் பங்கஜ கண்ணனே போற்றி
ஓம் பரந்தாமா பாவநாசா போற்றி
ஓம் பத்துத்தலை அறுத்த பரம்பொருளே போற்றி

ஓம் பண்டரிநாதா விட்டலா போற்றி
ஓம் பரத்வாஜர் தொழும் பாதனே போற்றி
ஓம் பட்டாபிஷேக மூர்த்தியே போற்றி
ஓம் பரதனின் அண்ணனே போற்றி
ஓம் பாதுகை தந்தாய் போற்றி
ஓம் பிறவி அறுப்பாய் போற்றி
ஓம் மாசிலா மணியே போற்றி
ஓம் மாருதியின் பிரபுவே போற்றி
ஓம் மாதவச் செல்வமே போற்றி
ஓம் மா இருள் விலக்குவாய் போற்றி

ஓம் மாயமான் மாய்த்தாய் போற்றி
ஓம் மாயவாழ்வு முடிப்பாய் போற்றி
ஓம் முக்குணம் கடந்தோய் போற்றி
ஓம் முன்னைப் பரம்பொருளே போற்றி
ஓம் ரகுவம்ச நாயகா போற்றி
ஓம் லவகுசர் தந்தையே போற்றி
ஓம் வல்லமை கொண்டாய் போற்றி
ஓம் வாயுகுமாரன் இதயமே போற்றி
ஓம் வானரருக்கு அருள்வாய் போற்றி
ஓம் விண்ணவர் தெய்வமே போற்றி

ஓம் விஷயம் கடந்தவனே போற்றி
ஓம் விருப்பு வெறுப்பற்றவனே போற்றி
ஓம் விஜய ராகவனே போற்றி
ஓம் விஸ்வாமித்திரர் வேள்வி காத்தாய் போற்றி
ஓம் வீபீஷணன் நண்பனே போற்றி
ஓம் வெற்றிக்கு ஒருவனே போற்றி
ஓம் வேண்டுவன ஈவாய் போற்றி
ஓம் வேடனொடும் ஐவரானாய் போற்றி
ஓம் வேத முதல்வா போற்றி
ஓம் வேந்தர் வேந்தா போற்றி

ஓம் வேதனை தீர்ப்பாய் போற்றி
ஓம் வேதம் தேடும் பாதனே போற்றி
ஓம் வேதாந்த சாரமே போற்றி
ஓம் வைகுண்ட வாசா போற்றி
ஓம் வைதேகி மணாளா போற்றி
ஓம் வையகப் பிரபுவே போற்றி
ஓம் வையகத்தை வாழ்விப்பாய் போற்றி
ஓம் ஸ்ரீசீதா லட்சுமண பரத சத்ருக்கன ஹனுமத் சமேத ராமச்சந்திர மூர்த்தியே போற்றி! போற்றி

 
மேலும் துளிகள் »
temple news
ஹூப்பள்ளி நகரின் கோகுலம் சாலையின் காந்தி நகரில் வரலாற்று பிரசித்தி பெற்ற பலமுறி கணபதி கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
தாய் மனம் குளிர தமிழில் அர்ச்சனை நடக்கும் பெருமைக்குரியது ஆதிசக்தி மாரியம்மன் கோவில். இது, ... மேலும்
 
temple news
பெங்களூரில் பல்வேறு பகுதிகளில், ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனி சிறப்பு கொண்டவை. வரலாற்று ... மேலும்
 
temple news
நகரத்திற்குள் பழமையான கோவில்கள் இருப்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட பழமையான கர்நாடக கோவில்கள் பற்றி ... மேலும்
 
temple news
பெங்களூரு – கனகபுரா பிரதான சாலையில், சுப்பிரமண்யபுரா வசந்தபுராவின் குப்தகிரி மலையில், ஸ்ரீவசந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar