ராவண வதத்திற்காக நிகழ்ந்தது ராமாவதாரம் என்பர். ஆனால், உண்மையில் ராமர் அவதரிக்க காரணமாக இருந்தவர்கள் கவுதமரும், அகலிகையும் தான். சந்தர்ப்ப சூழ்நிலையால் மனைவியைக் ’கல்லாகப் போ’ என்ற சபித்த கவுதமர், அதற்கு விமோசனமாக ’மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்து பூமிக்கு வருவார். அவரது பாதம் எப்போது உன் மீது படுகிறதோ அப்போது சுயவடிவம் பெறுவாய்” என்றார். அதன்படியே ராமனின் பாதம் பட்டதும் சுயவடிவம் பெற்றாள். தன்னுடன் வந்த மகரிஷி விஸ்வாமித்திரரிடம், “இந்த அன்னைக்கு ஏன் இக்கதி நேர்ந்தது?” என்று கேட்டார். வயிற்றில் சுமந்த கோசலையை மட்டுமல்ல! அகலிகையையும் ’அம்மா’ என்று அழைத்து அவளுக்கு பெருமை சேர்த்தார் ராமர்.