Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு குடலூர் மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு குடலூர் மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: குடலூர் மாரியம்மன்
  உற்சவர்: குடலூர் மாரியம்மன்
  அம்மன்/தாயார்: குடலூர் மாரியம்மன்
  தல விருட்சம்: வேப்பமரம்
  தீர்த்தம்: சிறுவாணி
  ஆகமம்/பூஜை : மூன்று கால பூஜை
  புராண பெயர்: ஆலாந்துறை
  ஊர்: ஆலாந்துறை
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரைத்திருவிழா, ஆடி வெள்ளி, ஆடி அம்மாவாசை, பவுர்ணமி ஆகிய விழாக்கள் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படும். ஆலாந்துறை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், இக்கோயிலின் சித்திரைத்திருவிழாதான் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படும். சித்திரைத்திருவிழாவின்போது, முதல் ஏழு நாட்களுக்கு கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். தொடர்ந்து, ஏழாவது நாளில், நொய்யல் ஆற்றங்கரையில்,கரகம் ஜோடிக்கப்பட்டு, திருவீதி ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வருவார்கள். அச்சமயம், சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள அனைத்து கிராம மக்களும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். மேலும், கரகம் ஜோடிக்கப்பட்டு ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு செல்லும்போது, பக்தர்கள் பூவோடும் எடுப்பார்கள். இவ்விழா, 11 நாட்களுக்கு மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். ஆடி வெள்ளி காலங்களில், சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின், பக்தர்களுக்கு மூன்று வேலையும் அன்னதானம் இடப்படும்.  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள அம்மன் சுயம்புவாக எழுந்தருளியவள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு குடலூர் மாரியம்மன் திருக்கோயில், கிளியகவுண்டன்பாளையம், ஆலாந்துறை, கோவை - 641101.  
   
போன்:
   
  +91 97154 46815 
    
 பொது தகவல்:
     
   நூற்றாண்டு காலத்திற்கு முன், தற்போதைய கேரள மாநிலம்,பாலக்காடு வனப்பகுதியுடன் இணைந்திருந்த பகுதிதான் ஆலாந்துறை காப்புக்காடு. காமராஜர் ஆட்சி காலத்தில், எல்லைகள் பிரிக்கப்பட்ட பின், தமிழகத்தின் கோவை மாவட்ட வனப்பகுதியில் இக்கோயில் அமைந்திருந்தது. காலப்போக்கில், காடுகள் அழிக்கப்பட்டு, நகர்மயமானதன் விளைவாக, தற்போது ஆலாந்துறை கிராமத்தின் சிறுவாணி சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் எதிர்புறத்தில் நொய்யல் ஆறு கரைபுறண்டு ஓடுவதால், தண்ணீருக்கும் காற்றுக்கும், குடலூர் மாரியம்மனுக்கு எப்போதும் பஞ்சம் வராது. மேலும், சுற்றுவட்டாரத்தில், பேரூர் பட்டீஸ்வரர்கோயிலுக்கு நிகரான பழமையான கோயில் குடலூர் மாரியம்மன் கோயில். இக்கோயில் வளாகத்தில் 80 ஆண்டுகள் பழமையான ஒரு புளியமரமும் உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  மக்கள் தங்களின் உடல் நலமாக இருக்க வேண்டும் என்றே வேண்டுவார்கள். சுமார் 1900ம் ஆண்டு, கோவையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, பல்வேறு இடங்களில் மர்மக்காய்ச்சலும், அம்மை நோயும் பரவியவண்ணம் இருந்தன. அச்சமயத்தில், இந்த அம்மனிடம் வேண்டியதன் பயனாக பலர் உயர்பிழைத்தாக வரலாறு உள்ளது. எனவே, முக்கியப்பிரார்த்னையாக உடல் நலம் குறித்த பிரார்த்தனையே இருக்கும். அதை தவிர, குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும், கடன் பிரச்னை தீர வேண்டும் என்பன உட்பட பல பிரார்த்தனைகள் வைக்கப்படுகிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மை வந்த ஒருவருக்கு முகத்தில் எவ்வித, பாதிப்பும் இல்லாமல் விலகுவதற்காக, இக்கோயிலில் உப்பும், குறுமிளகும் வேண்டி செலுத்தினால், தங்களது வேண்டுதல் நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இந்த கோயிலில் வேண்டுதல் வைப்பவர்கள், தங்களின் வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் பணத்தை நேர்த்திக்கடனாக செலுத்துவதில்லை. மாறாக, சித்திரை திருவிழாவின்போது, அலகு குத்துதல், சுற்றுவட்டாத்தில் உள்ள கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று மடிப்பிச்சை ஏந்து, அதில் கிடைக்கும் பொருட்களை கோயிலில் செலுத்துதல், இப்படியாக தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  அதேபோல், இரவு சரியாக,11 முதல் 12 வரையிலும் அம்மனின் நடமாட்டம் இருப்பதுபோல், கொலுசு சத்தம் கேட்கின்றன என்று ஊர் மக்கள் கூறுகின்றனர். கரகம் ஜோடிக்கப்பட்டு கோயிலுக்கு அழைத்து வரும்போது, திரளான பக்தர்கள் பூவோடு எடுப்பார்கள். அப்படியாக பூவோடு எடுக்கும் பக்தர்கள் கோயிலுக்குள் நுழையும்போது, வேண்டுதல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் மக்கள், கிழே படுத்துக்கொள்வார்கள். அவர்களின் மீது நடந்து தான் பூவோடு எடுப்பவர்கள் கோயிலை சுற்றி வர வேண்டும். இந்நிகழ்வு கோவை மாவட்டத்திலேயே இக்கோயிலில் மட்டும் தான் நடக்கும்.

 
     
  தல வரலாறு:
     
  இக்கோயில் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் சுயம்புமாக எழுந்துள்ளது. இதனை அப்பகுதியிலிருந்த மலைவாழ் மக்கள், தங்களின் காவல் தெய்வமாக வழிபட்டுள்ளனர். தொடர்ந்து, காடுகள் அழிக்கப்பட்டு கிராமங்களாக உருவெடுத்த பின், கிராம மக்கள் வழிபடாமல் சற்று தயக்கத்தில் இருந்துள்ளனர். தன்தொடர்ச்சியாக, அப்பகுதியில் வந்த அம்மை நோயின் எதிரொலியாக மக்கள் இங்கு வந்து வழிபடத்துவங்கி, நல்ல பயன்பெற்ற பின், சுற்றுவட்டாரப்பகுதி மக்களுக்கு அச்செய்தி சென்றடைய, கோயில் ஆலாந்துறை சுற்றுப்பகுதியில் பிரசித்தி பெற்றது. 58 ஆண்டுகளுக்கு முன், சுயம்பு வடிவத்தில் உள்ள மாரியம்மனை அகற்றிவிட்டு, ஒரு சிலை வடிவம் கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி, சுயம்பு வடிவில் உள்ள மாரியம்மனை இடம் மாற்றம் செய்தபோது, அங்கிருந்து தீக்குழப்புகள் வெடித்துள்ளன. அதன் பிறகு, அம்முயற்சியை ஊர் பொதுமக்கள் கைவிட்டு, சுயம்பு வடிவத்தை அங்கேயே வைத்துவிட்டு, கூடுதலாக சிலை வடிவம் அமைத்துள்ளனர். குடலூர் மாரியம்மன். குடலூர் மாரியம்மன் என்றால், குடலுக்குள் உயிராய் இருப்பவள் என்று பொருள். இந்த அம்மன், அனைவரின் வீட்டிற்கும் சென்று உணவருந்தியதாக வரலாறு உள்ளது. சுயம்புவாகத்தோன்றிய இந்த மாரியம்மன், நோய்களை குணப்படுத்தக்கூடியவள் என இப்பகுதி கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள அம்மன் சுயம்புவாக எழுந்தருளியவள்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar