Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு அத்தனூர் அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு அத்தனூர் அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அத்தனூர் அம்மன்
  அம்மன்/தாயார்: அத்தனூர் அம்மன்
  ஊர்: காளப்பநாயக்கன்பாளையம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

 
     
 திருவிழா:
     
  இங்கு செவ்வாய், வெள்ளி, அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பூஜையில் கலந்துகொள்ள பெரும் அளவில் பக்தர்கள் வருகின்றனர். தை முதல் நாள் சிறப்பு அலங்கார பூஜைகள் உண்டு. சித்திரை முதல் நாள் கொண்டாடப்படும் பூஜையே இத்தலத்தில் ஆண்டு உற்சவமாகும்.  
     
 தல சிறப்பு:
     
  பொதுவாக காளியம்மனின் மேல் வலக்கையில் உடுக்கை இருக்கும். ஆனால் இங்கு அக்னி உள்ளது வித்தியாசமான அமைப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு அத்தனூர் அம்மன் திருக்கோயில், காளப்பநாயக்கன்பாளையம், கோயம்புத்தூர்.641108  
   
போன்:
   
  +91  
    
 பொது தகவல்:
     
  வடக்கு நோக்கி அமைந்த கோயில். நுழைவாயிலில் ராஜகோபுரம் அழகுக்கு அழகு சேர்க்கும்விதமாக கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. உள்ளே நுழைந்தவுடன் விழா மண்டபம் எனப்படும் மகா மண்டபம். எழிலுடன் அமைந்த இம்மண்டபத்தின் மேற்குப்புறத்தில் இவ்வூருக்கு முதன் முதலில் அடியெடுத்து வைத்த குலப்பெருமக்கள் ஆயிக்கவுண்டர் அரசம்மாள் திருவடிவங்கள் காட்சியளிக்கின்றன. விநாயகரும் முருகனும் தனிச் சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வடக்கே நவகிரக சன்னதி உள்ளது. மகாமண்டபத்தின் விதானத்தில் அஷ்டலட்சுமிகளுடன் ஸ்ரீசக்கரம் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது.

அர்த்த மண்டப நுழைவாயிலில் துவாரபாலகர்கள் காவல்புரிகின்றனர். அர்த்த மண்டப உட்புறத்தில் மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, அவினாசி கருணாம்பிகை, பேரூர் பச்சை நாயகி ஆகியோரது வண்ண ஓவியங்கள் அமைந்துள்ளன. கோஷ்டத்தில் சாமுண்டி, கவுமாரி, மாகேஸ்வரி மூவரும் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் பின்புறம் முதன் முதலில் பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்ட ஆதி அருவத்திருமேனியின் சன்னதி உள்ளது. கோயிலைச் சுற்றிலும் தென்னை, பாக்கு மற்றும் பல்வேறு மலர்ச்செடிகளை வளர்த்து பசுமையான சூழலை ஏற்படுத்தி உள்ளனர். தனிப்பட்ட குல கோயிலாக இருந்தாலும் மற்றவர்களும் வந்து வணங்கத் தடையில்லை.
 
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை, உடல்நலம், தொழில், குழந்தைபேறு முதலிய வேண்டுதல்களுக்காக எண்ணற்ற பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டி பலன் பெற்றவர்கள் நன்றிக்கடனாக அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதை காண முடிகிறது. 
    
 தலபெருமை:
     
  கருவறையில் அம்மன் நான்கு கரத்துடன் அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபிணியாக எழிலுடன் வீற்றிருக்கின்றாள். மேல் வலக்கையில் அக்னி, இடக்கையில் உடுக்கையும் கொண்டுள்ளாள். கீழ் வலக்கை, திரிசூலத்தை காலடியில் கிடக்கும் தாருகன் எனும் அரக்கன்மீது பாய்ச்சுவதற்காக உயர்த்திப் பிடித்துள்ளது. கீழ் இடக்கையில் கபாலம் இருக்கிறது. வலது கால் இருக்கையின்மீது ஊன்றியிருக்க, இடக்காலை அரக்கன்மீது வைத்துள்ளார்.
 
     
  தல வரலாறு:
     
  பதினெட்டு வகை தானியங்களும் முதன்மையானது வரகு. கோயில் கோபுரம் மற்றும் விமானக் கலசங்களில் அதிகச் சத்துள்ள அந்தத் தானியத்தை நிரப்பி இருப்பர். இது இடி, மின்னலைத் தடுத்து இடிதாங்கியைப் போல் பயன்படுகிறது. நாட்டில் பெரும் பஞ்சம் வந்தால், விதைத் தானியம் எங்கும் கிடைக்காது. தவிர்க்க முடியாத அந்தச் சூழலில் கோபுரக்கலசங்களில் இருந்து வரகினை எடுத்து உணவுக்காகப் பயிரிடுவர். உயர்வான வரகு தானியத்தை உண்ணக் கூடாது என இறைவனால் கூறப்பட்ட ஒரு சம்பவம் ஒரு காலத்தில் நடந்தது. திருப்பாதூர் அகஸ்தீஸ்வரர் கோயிலில் திருப்பணி செய்து வழிபட்டு வந்த வேளாளர்கள், வரகு தானியம் பயிரிடுவதில் சிறந்து விளங்கினர். ஒரு சமயம் கோயில் திருவிழாவின்போது அவர்களுக்கும் மற்றொரு சாராருக்கும் பிரச்னை எழுந்தது. வழக்கு அரசரிடம் போனது. விசாரித்த மன்னர் வேளாளரை விடுவித்தான். வழக்கில் வெற்றிபெற்ற மகிழ்வோடு திருப்பாதூர் அகஸ்தீசர் கோயிலுக்கு சென்றனர். அங்கே இறைவன் அசரீரியாக, இனிமேல் அவர்கள் வரகைத் தொடக்கூடாது எனக் கூறி வரகுண்ணா பெருங்குடியினர் எனப்பெயரும் சூட்டினார்.

இச்செய்தி பெருங்குடி குல செப்பேட்டில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இக்குலத்தில் பிறந்த குன்றுடையான் என்பவர் பிறந்த சில நாட்களிலேயே பெற்றோரை இழந்தார். பணியாள் ஒருவனால் வளர்க்கப்பட்டு தன் தாய்மாமன் மகளை மணந்தார். நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லை. அதற்காக சிதம்பரம் நடராஜரை வணங்கி விரதம் மேற்கொண்டனர். ஒருநாள் அம்பிகை குன்றுடையான் மனைவி தாமரையின் கனவில் தோன்றி, உமக்கு இரண்டு ஆண் மக்களையும் ஒரு பெண்ணையும் அளித்தார். அப்படிப் பிறந்த குழந்தைகளே அண்ணன்மார் எனப் போற்றப்படும் பொன்னர், சங்கரும், அருக்காணியும் ஆவர். அவர்களின் ஆற்றலைக்கண்ட சோழ மன்னன், நாட்டின் காவல் பணிகள் அனைத்தையும் அவர்களிடமே ஒப்படைத்தார். வேட்டுவர்களின் சதியால் அண்ணன்மார் வீர மரணம் எய்தினர். தங்கை அருக்காணி போர் நடைபெற்ற காட்டை அடைந்து, தனது சக்தியால் வேள்வி செய்து, இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்தாள்.

பின்னர் அனைவரும் வீர சொர்க்கம் அடைந்தனர். அண்ணன்மாரைக் கொன்றபோது தங்கையைக் காப்பாற்றி வளர்த்த அம்மனே, செல்லாண்டி அம்மன் என தமிழகமெங்கும் வழிபடப்பெறுகிறாள். செல்லாண்டி அம்மன் கொற்றவையின் வடிவம் ஆவாள். இக்கொற்றவை அத்தனூர் எனுமிடத்தில் மூலக்கோயில் கொண்டதால் அத்தனூர் அம்மன் எனப் பெயர் பெற்றார். அத்தனூர், சேலத்துக்கு அருகில் உள்ளது. அங்குள்ளதே மூலக் கோயில். அதன் பின்னர் கோவை சுற்றுவட்டாரப் பகுதியிலும் அத்தனூர் அம்மனைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் குடியேறிய படியால் கோவை, காளப்பநாயக்கன் பாளையம் எனும் இடத்திலும் அந்த அம்மனுக்கு ஒரு கோயில் எழுந்தது. சேலத்தில் உள்ள மூலக் கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து சிறிய அளவில் கட்டப்பட்ட இக்கோயில், படிப்படியாக வளர்ச்சிகண்டு இன்று எழிலான கற்கோயிலாகக் காட்சி தருகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பொதுவாக காளியம்மனின் மேல் வலக்கையில் உடுக்கை இருக்கும். ஆனால் இங்கு அக்னி உள்ளது வித்தியாசமான அமைப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.