Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கல்யாணவரதராஜர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கல்யாணவரதராஜர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கல்யாணவரதராஜர்
  அம்மன்/தாயார்: வேதவல்லி
  தல விருட்சம்: வில்வம்
  தீர்த்தம்: அமராவதி தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்
  புராண பெயர்: சங்கரராம நல்லூர்
  ஊர்: கொழுமம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரைப்பிறப்பு, சித்ராபவுர்ணமி, வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழியில் பிரம்மோற்ஸவம்.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்தில் தாயாருக்கு வில்வத்தால் பூஜை செய்யப்படுகிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கல்யாணவரதராஜர் திருக்கோயில், கொழுமம்- 642 204 கோயம்புத்தூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-4252 - 278 644 , 93451-96814. 
    
 பொது தகவல்:
     
  கோயில் வளாகத்திற்கு வெளியே கொடிமரம் உள்ளது. பெரியாழ்வார், விஷ்வக்ஸேனர், நம்மாழ்வார், ராமானுஜர் ஆகியோர் முன்மண்டபத்தில் உள்ளனர். மூலவரின் விமானம் ஏகதளம் எனப்படுகிறது.
 
     
 
பிரார்த்தனை
    
 

நின்ற கோலத்தில் உள்ள கல்யாண வரதராஜரை வணங்கினால் திருமணத்தடைகள் நீங்கி, நல்ல இல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. சனி தோஷம் நீங்கவும், புத்திரப்பேறு கிடைக்கவும் வேண்டலாம்.


 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கும் தாயாருக்கும் விசேஷ திருமஞ்சனம் செய்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
  அமராவதி நதியின் தென்கரையில் சுற்றிலும் பசுமையுடன் அமைந்துள்ள இத்தலத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜர் திருமணக்கோலத்திலும், அவருக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் தாயாரும் அருளுகின்றனர். முன் புறம் கருடாழ்வார் இருக்கிறார். சுவாமியின் பாதமும் உள்ளது. 

வீர ஆஞ்சநேயர்: கோயில் முகப்பில் உள்ள மண்டபத்தின் தூணில் இருக்கும் வீரஆஞ்சநேயர், வாயுமூலையை பார்த்தபடி வரதராஜரை நோக்கி உள்ளார். இதன்மூலம் தன் தந்தைக்கும், நாராயணனுக்கும் ஒரே நேரத்தில் மரியாதை தருவதை இங்கு காணமுடிகிறது. இவரது திருவுருவத்திற்கு மேலே சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. வியாச முனிவர், இவரை வழிபட்டு அருள் பெற்றுச் சென்றுள்ளார்.
 
     
  தல வரலாறு:
     
  இப்பகுதியை சோழமன்னன் ஒருவன் ஆட்சி செய்தபோது, நாட்டில் மழை வளம் பொய்த்து, நீர்நிலைகள் வற்றியது. இதனால், மக்கள் பஞ்சத்தில் வாடினர். நாட்டில் குறைவிலாது மழை பெய்து, மக்கள் வாழ்வில் சிறக்க அருளும்படி மன்னர், மகாவிஷ்ணுவிடம் வேண்டிக்கொண்டார். அவருக்கு காட்சிதந்த விஷ்ணு, மழைவளம் அருளினார். நாடு செழித்தது. மக்களுக்கு அருளிய மகாவிஷ்ணுவிற்கு மன்னர், இவ்விடத்தில் கோயில் கட்டினார்.

வில்வ இலை பூஜை: இத்தலத்திற்கு அருகில் சிவாலயம் ஒன்று உள்ளது. சைவம், வைணவத்தை இணைக்கும் விதமாக இவ்விரு ஆலயங்களும் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால், இவ்வூர் முன்பு சிவனின் திருப்பெயரான "சங்கரன்', பெருமாளின் திருநாமமான "ராமன்' என்ற பெயர்களை இணைத்து "சங்கரராமநல்லூர்' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சைவ, வைணவ இணைப்புத்தலமென்பதால், சுவாமிக்கு வலப்புறம் அமர்ந்த கோலத்தில் உள்ள வேதவல்லி தாயாருக்கு வில்வஇலைகளைக் கொண்டே பூஜைகள் செய்யப்படுகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் தாயாருக்கு வில்வத்தால் பூஜை செய்யப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar