சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 48 · 100 / 159
மீனாட்சி அம்மன் கோயிலில் இதற்கு முன் நடந்த கும்பாபிஷேகங்கள்
- 1481ம்ஆண்டு கம்பன்ன உடையார் என்பவரால் திருப்பணி செய்யப்பட்டு அம்மன் சன்னதிக்கு மட்டும் கும்பாபிஷேகம் நடந்தது.
- 1628ம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர், கோயிலுக்கு திருப்பணிகள் செய்தபோதிலும் கும்பாபிஷேகம் நடத்தவில்லை.
- 1708ல் மன்னர் விஜயரங்க சொக்கநாதர் திருப்பணி செய்து சுவாமி சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு கும்பாபிஷேகம் நடத்தினார்.
- 1877ம் ஆண்டு ஏழு கோயில் நகரத்தார் சார்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
- 1923ல் அழகப்ப செட்டியாரால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
- 1963ம் ஆண்டு பி.டி.ராஜன் தலைமையில் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
- 1974ல் நாராயணன் செட்டியார் தலைமையில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
- 1995ம் ஆண்டில் அனைத்து கோபுரங்களும் புதுப்பிக்கப்பட்டு, அனைத்து கர்ப்ப கிரகங்களுக்கும் அஷ்டபந்தனம் செய்து முழுமையான கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
- 14 ஆண்டுகளுக்கு பிறகு 2009ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
- இதை தொடர்ந்து பல தடைகளை தாண்டி 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (2026 செப்.,17) நடக்கிறது. 1963ம் ஆண்டு நடந்த மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த காஞ்சி மஹாபெரியவர்.