சிறப்பு மலர் · பகுதி 3 · பக்கம் 54 · 111 / 159
சொக்கநாதரின் 64 திருவிளையாடல்கள்
- குருவை இகழ்ந்த இந்திரனின் சாபத்தைப் போக்கியது.
- வெள்ளை யானைக்கு துருவாசரால் வந்த சாபம் தீர்த்தது.
- கடம்பவனத்தை அழித்து நாடாக்கியது.
- உமையம்மை மலயத்துவச பாண்டியனுக்கு மகளாகப் பிறந்தது.
- சிவபெருமான் சோமசுந்தர பாண்டியனாய் வந்து தடாதகைப் பிராட்டியாரை மணம் செய்தது.
- பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய இருவருக்கும் வெள்ளி அம்பலத்துள் திருக்கூத்து தரிசனம் காட்டியது.
- தடாதகை பிராட்டியார் பொருட்டு குடையாளாகிய குண்டோதரனுக்கு அன்னமிட்டது.
- குண்டோதரனுக்காக வைகையையும் அன்னக்குழியையும் வருவித்தது.
- தடாதகை பிராட்டியாரின் வேண்டுகோளுக்கிணங்க காஞ்சனமாலை நீராட ஏழு கடல்களை அழைத்தது.
- காஞ்சன மாலையுடன் நீராட சொர்க்கத்திலிருந்த மலையத்துவச பாண்டியனை வர வழைத்தது.
- தடாதகை பிராட்டியாரிடம் உக்கிரகுமாரன் மகனாகப் பிறந்தது.
- உக்கிர குமாரனுக்கு வேல் வளை, செண்டளித்தது.
- கடல்வற்ற வேல் எறிந்தது.
- உக்கிர குமாரனுடன் போர்புரிந்த இந்திரன் முடிமேல் வேல் எறிந்தது.
- மேருமலையில் இருந்த செல்வத்தை எடுக்க முற்பட்டபோது அதற்கு ஒப்புக்கொள்ளாத மேருவை செண்டால் எறிந்தது.
- வேதத்திற்குப் பொருள் தெரியாமல் மயங்கிய ரிஷிகளுக்கு வேதத்தின் பொருள் கூறி விளக்கியது.
- பாண்டிய மன்னனின் மகனின் கிரீடம் (மணி முடிக்காக) ரத்தினம் விற்றது.
- மதுரை மீது வருணபகவான் விட்ட கடலை வற்றச் செய்தது.
- வருணன் விட்ட மழையைத் தடுத்து நான் மாடக் கூடலாக்கியது.
- எல்லாம் வல்ல சித்தராய் எழுந்தருளி சித்துகள் செய்தது.
- சோதித்து வந்த பாண்டியனுக்காக கல்யானைக்கு கரும்பு கொடுத்தது.
- மதுரையை அழிக்க சமணர்கள் ஏவிய யானையைக் கொன்றது.
- கவுரியம்மையின் பொருட்டு விருத்த குமாரர் பாலர் ஆனது.
- பாண்டிய மன்னனுக்காக சிவபெருமான் கால்மாறி ஆடியது.
- கொலைக்கு அஞ்சிய வேடன் பொருட்டு பழிக்கு அஞ்சிய பாண்டியனுக்காக வணிகன் திருமணத்தில் சாட்சி காட்டியது.
- தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்தவனின் பாவத்தைத் தீர்த்தது.
- வாள்படை ஆசிரியரின் மனைவியை வலிமையின் காரணமாக காதலித்த மாணவன் கையை வெட்டியது.
- சமணர்கள் மதுரை மீது ஏவிய நாகத்தை அழித்தது.
- சமணர்கள் ஏவிய பசுவை நந்திதேவரை அனுப்பிக் கொன்றது.
- சவுந்தர சாமாந்தன் பொருட்டுப் போர்ச்சேவகராக உண்மையை காட்டியது.
- பாண்டிய மன்னனுக்காக உலவாக்கிழி அருளியது.
- மதுரை வீதியில் இருந்த ரிஷிபத்தினிகளுக்கு வளையல் விற்றது.
- இயக்கியர்களுக்கு அட்டமாசித்திகளை அருளியது.
- சோழமன்னன் பொருட்டு மீன்முத்திரை பொறித்திருந்த கதவை திறக்கச் செய்து தரிசனம் தந்தது. அவன் சென்றபின்பு மீண்டும் ரிஷப முத்திரை பொறித்தது.
- பாண்டிய மன்னனுக்காக படைகளுக்குத் தண்ணீர் பந்தல் வைத்தது.
- பொன்னனையாள் பொருட்டு ரசவாதம் செய்தது.
- மதுரை மீது படை எடுத்து வந்த சோழனை மடுவில் ஆழ்த்தியது.
- வேளாளராகிய அடியவர் பொருட்டு உலவா நெற்கோட்டை அருளியது.
- தாயத்தார் வழக்கு தொடுக்க மயங்கிய வணிகன் மருகன் பொருட்டு மாமனாக வந்து வழக்கு தீர்த்து அருளியது.
- வருணதேவர் பொருட்டு சிவலோகம் காட்டியது.
- இசையில் வல்லவரான பாணபத்திரர் பகைவனை விறகு விற்பவராய் வந்து இசைபாடி ஓடச் செய்தது.
- பாணபத்திரர் பொருட்டு சேரமான் பெருமாளுக்கு அறிமுகக்கடிதம் தந்தது.
- பாணபத்திரர் மழையால் வருந்தாது பாட பலகை இட்டது.
- ஈழதேசத்துப் பாண்வல்லாளை பாணபத்திரர் மனைவி வெல்ல அருள் செய்தது.
- தாய் இழந்த பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுத்தது.
- பன்றிக்குட்டிகளைப் பாண்டியருக்கு மந்திரியாக ஆக்கியது.
- கரிக்குருவிக்கு உபதேசம் செய்து அருளியது.
- நாரைக்கு முத்தி கொடுத்து அருளியது.
- பிரளயத்தால் அழிந்த மதுரையின் நகரின் எல்லையை பாம்பைக் கொண்டு அறிவித்தது.
- பாண்டிய மன்னனின் பொருட்டுப்படைத்துணை சென்று சுந்தரப் பேரம் செய்தது.
- பாண்டிய மன்னன் சந்தேகம் தீரும் பொருட்டு தருமிக்கு கவிதந்து பொற்கிழி கொடுத்தது.
- தருமிக்குத் தந்த கவிக்கு குற்றம் கூறிய நக்கீரரைப் பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்தப்பின் கரை ஏற்றி அருளியது.
- நக்கீரருக்கு இலக்கணம் உரைத்தது.
- நக்கீரர் முதலிய புலவர்கள் பொருட்டு சங்கப் பலகை தந்தது.
- சங்கத்தார் கலகத்தை மூங்கைப் பிள்ளையாய் தீர்த்தது.
- பாண்டியருடன் கோபித்து நீங்கிய இடைக்காடர் பிணக்கு தீர்த்தது.
- பரதவர்குலப் பெண் பொருட்டு வலை வீசி அவளை மணந்தது.
- திருவாதவூரடிகளுக்கு உபதேசம் செய்தது.
- அரசனுக்கு அஞ்சிய வாதவூரடிகளுக்காக நரிகளைப் பரிகளாக்கியது.
- பாண்டியனுக்கு அளித்த குதிரைகளை நரிகள் ஆக்கியது.
- திருவாதவூரடிகள் பொருட்டு வைகையில் வெள்ளம் வரச்செய்து அதை அடைக்க ஏவிய வந்திப்பாட்டிக்காக கூலி ஆளாய்ச் சென்று பிட்டுக்கு மண் சுமந்தது.
- திருஞான சம்பந்த சுவாமிகளால் கூன் பாண்டியன் சுரத்தையும் கூனையும் நீக்குவித்தது.
- திருஞானசம்பந்த சுவாமிகளின் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேறியது.
- வணிகப் பெண்ணுக்குச் சாட்சியாக வன்னி மரமும் கிணறும், இலிங்கமும் வரச் செய்தது.