மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 3 · பக்கம் 66 · 145 / 159

சிவனின் பாதம்

சிவபெருமானின் இடப்பகுதி அம்பாளின் அம்சமாகும். பொதுவாக கோயில்களில் நடராஜர் இடது காலை தூக்கித்தான் ஆடிய கோலத்தில் இருப்பார். எனவே அவரது தூக்கிய திருவடியை அம்பாள் பாதமாகவே கருதுவர். ஆனால் இங்கு வலதுகாலை தூக்கி ஆடிய கோலத்தில் இருப்பதால், இந்த பாதத்தை சிவனின் பாதமாக கருதுகின்றனர். சிவத்தலங்களில் இங்கு மட்டுமே சிவனின் பாதத்தை தரிசிக்கலாம் என்பது விசேஷம்.

விளம்பரம்
மேலே
விளம்பரம்