மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 3 · பக்கம் 67 · 150 / 159

வலை வீசியது ஏன்

வேதத்தின் பொருளை பார்வதிக்கு உபதேசித்தார் சிவன். அப்போது அவள் கவனம் சிதறி மீனவப்பெண்ணாக பிறக்கும்படி சபித்தார். தாயை சபித்ததால் வேத ஓலைச்சுவடிகளை கடலில் வீசினார் முருகன். இதனால் கோபமுற்று முருகனை ஊமையாகவும், முருகனை கைலாயத்திற்குள் அனுமதித்து வேடிக்கை பார்த்த நந்திதேவரை சுறாவாகவும் பிறக்கும்படி சபித்தார் சிவன். மீனவர் குலத்தில் மன்னரின் மகளாக பிறந்தாள் பார்வதி. இந்நிலையில் கடலுக்குள் பயங்கர சுறாமீன் ஒன்று தொல்லை கொடுத்து வந்தது. அதைக் கொல்பவருக்கு தன் மகளை மணமுடித்து தருவதாக அறிவித்தார் மன்னர். அங்கு மீனவ இளைஞராக வடிவில் வந்த சிவன் சுறாவின் கொட்டத்தை அடக்கினார். அதன்பின் பார்வதியுடன் மணக்கோலத்தில் காட்சியளித்தார். இந்த கோலத்தில் சுவாமியை தரிசித்தால் எண்ணியதெல்லாம் நிறைவேறும்.

விளம்பரம்
விளம்பரம்
மேலே
விளம்பரம்