சிறப்பு மலர் · பகுதி 3 · பக்கம் 69 · 155 / 159
கோயில்களின் நகரம்
காஞ்சிபுரத்தைப்போல் மதுரையும் கோயில்களின் நகரம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு மீனாட்சி அம்மனோடு தொடர்புடைய தலங்கள் நிறைய உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோமா...
1. திருவாப்புடையார் (திருவாப்பார்)
தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. வைகை நதிக்கு வடகரையில் அமைந்த செல்லூரில் அமைந்துள்ளது. அமைச்சர் ஒருவர் மரத்துண்டை ஆப்பு அடித்து, மன்னரிடம் சுயம்பாக தோன்றிய லிங்கம் கூறினார். அதுவே உண்மையில் லிங்கமாக மாறியது. திருவாப்பனூர் என அழைக்கப்படுகிறது. வைகை ஆற்று மணலைச் சோறாக்கிய தலம். பங்குளி உத்திரத்தன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் பொன்னனையாளுக்கு காட்சி கொடுக்க இங்கு எழுந்தருளுவார்கள்.
2. வடதிருவாலவாய் (ஆதி சொக்கநாதர்)
இடைக்காடருடைய பிணக்கைத் தீர்க்கும் பொருட்டு சொக்கநாதர் எழுந்தருளிய தலம். இது தற்போது பழைய சொக்கநாதர் கோயில் என அழைக்கப்படுகிறது. இது சிம்மக்கல்லில் உள்ளது.
3. காஞ்சனமாலை அம்மன்
தடாதகைப் பிராட்டியாரின் (மீனாட்சி) தாயார் காஞ்சனமாலை. புதுமண்டபத்திற்கு அருகில் எழுகடல் தெருவில் உள்ளது.
4. தென்திருவாலவாய்
தெற்கு மாசி வீதியில் கிழக்கு மூலையில் உள் ளது. எமதர்மனால் பூஜிக்கப்பட்ட சிறப்பினை உடையது.
5. பைரவர்
கீழ ஆவணி மூல வீதியில் புதுமண்டபத்திற்கு அருகில் உள்ளது.
6. செல்லத்தம்மன்
வக்கீல் புதுத்தெருவுக்கும். வடக்கு மாசி வீதிக்கும் நடுவில் உள்ளது. இங்கு கண்ணகிக்கு சிலை உள்ளது. முன்பு இத்தலம் காவல் வல் தெய்வமான காளியின் கோயிலாக இருந்துள்ளது என சொல் லப்படுகிறது.
7. சப்தமாதர் - வீரபத்திரர்
தெற்கு மாசி வீதியில் உள்ளது. குலசேகர பாண் டியனால் தெற்கு திசைக்கு நிறுவப் பெற்ற காவல் தெய்வத் திருக்கோயில், இங்கு அமைந்திருந்த சப்த மாதர் - வீரபத்திரர், விநாயகர் திருவுருவங் கள் தற்போது சுவாமி சன்னதியின் முதல் பிரகா ரத்தில் சரஸ்வதி சன்னிதிக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
8. வண்டியூர் மாரியம்மன்
திருமலை நாயக்கர் அமைத்த நீராழி மண்டபத் தின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. முற்கா லத்தில் பங்குனி உத்திரத்தன்று மீனாட்சி சுந்த ரேஸ்வரர் திருப்பூவணத்திற்கு எழுந்தருளினர். அப்போது திருமலை நாயக்க நாய மன்னரின் கட்ட ளையாக இங்கு சுவாமி அம்பாள் விடையாற்றி செல்லும், இங்கு செவ்வாய், வெள்ளிக்கிழமை களில் கூட்டம் கூடும்.
9. முக்தீஸ்வரர்
தெப்பக்குளத்தின் மேற்கு சுரையில் அமைந் துள்ளது. முத்துவீரப்ப நாயக்கரால் கட்டப்பட்ட கோயில் செப்டம்பர் மாதம் சூரியக்கதிர்கள் இங்கு சுவாமி மீது படுவதால் சூரிய வழிபாட்டுத் தலமாக இதை சொல்வர். தெப்போற்ஸவத்தின் 910ம் நாளன்று இக்கோயிலுக்கு சவாமி அம்பாள் எழுந்தருளி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். 12 ம் திருநாளான தெப்ப உற்ஸ வத்தின் போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் இங்கு எழுந்தருள்வர்.
10. காலபைரவர்
தெப்பக்குளத்தின் வடக்கு கரையில் மாரியம் மன் கோயிலுக்கு அருகில் உள்ளது.
11. கருப்பண சுவாமி
கீழ மாசி வீதியில் தேரடி மண்டபத்திற்கு அருகில் உள்ளது.
12. வடக்கு வாசல் அனுமார்
வடக்கு மாரட் வீதியில் ஆதி சொக்கநாதர் கோயிலுக்கு அருகில் உள்ளது.
13. எழுகடல் விநாயகர்
எழுகடல் வீதியில் காஞ்சன மாலை அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ளது.
- காசி விசுவநாதர் (குருசாமி சாஸ்திரி மண்டபம்)
வைகைநதி கரையில் பேச்சியம்மன் படித்துறை
வீதியில் உள்ளது. பங்குனி உத்திரத்தன்று திரு வாப்புடையார் கோயிலுக்கு செல்லும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் இங்கும் எழுத்தருள்வர்.
15. பரிபூரண விநாயகர்
வைகை நதிக்கரையில் அமைந்துள்ள மணி நக ரம் ராஜாமில் அருகில் கடுதண்ணீர் வாய்க்கால் தெருவில் இக்கோயில் உள்ளது.
16. கடம்பவனேஸ்வரர்
வைகை நதிக்கரை பகுதியில் மணி நகரம் சுடுதண்ணீர் வாய்க்கால் தெருவில் இக்கோயில் உள்ளது.
17. தெய்வநாயகப் பெருமாள்
மகாபாரதக் கதையில் குந்திநகர் என்று போற்றப் படுகின்ற கொந்தகையில் உள்ளது இக்கோயில்.
18. சித்தி விநாயகர்
மதுரையில் இருந்து தேனி செல்லும் வழியில் நாகமலை புதுக்கோட்டை என்னும் ஊரில் உள் ளது இக்கோயில்
19. செல்வ விநாயகர்
மதுரை தேனி செல்லும் வழியில் செக்கானூரணி என்னும் ஊரில் உள்ளது.
20. இம்மையில் நன்மை தருவார்
மக்கள் சிவபூஜை பற்றி அறிய, சிவபெருமான தன்னைத்தானே பூஜித்த திருமூர்த்தத்தை உடை யது. இது மேலமாசி வீதியில் உள்ளது. இதனை நடுவூர் எனச் சொல்வர்.
21. கூடல் அழகர்
பெருமாளுக்குரிய 108 வைணவக்கோயில் களில் இதுவும் ஒன்று. பெரியாழ்வாரால் பல் வாண்டு பாடப்பட்ட கோயில், திருமங்கை யாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற கோயில் என பல சிறப்புகளை கொண்டது. இதனை திருக்கூடல் எனபர். தெற்கு மாசி வீதி கள் கூடும் தென்மேற்கு மூலையில் உள்ளது.
22. சீனிவாசப் பெருமாள்
மீனாட்சிபுரத்தில் ஒரு கோயிலும், 22 தல்லாகுளத்தில் ஒரு கோயிலும் உள்ளன.
- மதன கோபாலசுவாமி
மேல மாசிவீதியில் உள்ளது.
24. முனீஸ்வரன் கோயில்
வடக்குச் சித்திரை வீதியில் கோபுரவாசலை அடுத்துள்ளது. இது காவல் தெய்வங்களில் முத லாவதாகச் சொல்லப்படும்.
25. திருப்பரங்குன்றம்
முருகப்பெருமானுக்குரிய ஆறுபடைவீடுகளில் முதல்படை வீடு, சங்க இலக்கியம், திருமுறை களில் இடம் பெற்ற இத்தலம் காலத்தால் முந் திய பெருமையை உடையது.
26. திருவாதவூர்
மதுரைக்கு வடக்கே 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு திருமறைநாதர் என் னும் பெயரில் சிவபெருமான் அருள்புரிகிறார். மாணிக்கவாசகர் அவதரித்த புண்ணிய பூமி. வைகைக்கரையில் உள்ளது.
- பிடாரி அம்மன்
திருவாதவூரருக்கு திருமறைநாதருக்கு காவல் தெய்வம்.
28. திருவாரூர் அய்யம்பொழில் ஈசர்
திருவாதவூர் தலத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ள ஆமூர் என்னும் ஊரில் இக்கோ யில் உள்ளது. மயில் வணங்கிய தலம் என்பர்.
29. சுண்ணாம்பூர் மகாகணபதி
திருவாதவூரர் தலத்திற்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளது.
30. பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்
இதுபோக பேச்சியம்மன் கோயில், கருப்பண்ணசாமிக்கும் கோயில்கள் உள்ளன.