மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 3 · பக்கம் 69 · 158 / 159

புகழ் பாடுவோமா...

மதுரை மீனாட்சி, சொக்கநாதரை பற்றி பலரும் புகழ்ந்து பாடியுள்ளனர். அவர்களது பெயர்களும், அவர்கள் எழுதிய நூல்களும் இதோ...

  • ஆதிசங்கரர்- மீனாட்சியம்பாள் ஸ்தோத்திரம், மீனாட்சி பஞ்ச ரத்னம்
  • நீலகண்ட தீட்சிதர் - மீனாட்சியம்பிகை ஆனந்த ஷாகரஸ்தவம்
  • முத்துச்சாமி தீட்சிதரின் கீர்த்தனைகள்
  • பரஞ்சோதி முனிவர் - திருவிளையாடல் புராண போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்து அந்தாதி
  • குமரகுருபரர் - மீனாட்சியம்பிகை பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்பிகை குறம், மீனாட்சியம்பிகை இரட்டை மணிமாலை, மதுரைக்கலம்பகம்
  • தருமையாதீனக் குரு முதல்வர் குரு ஞானசம்பந்த சுவாமிகள் - சொக்கநாத வெண்பா, சொக்கநாத கலித்துறை
  • அருணகிரி நாத சுவாமிகள் - திருப்புகழ்
  • திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் - மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா
  • குலசேகர பாண்டியன் - மதுராபுரி அம்பிகை மாலை
  • பலபட்டடைச் சொக்கநாதப்புலவர் - மதுரை மும்மணிக்கோவை
  • தாண்டவ மூர்த்திக்கவிராயர் - மதுரை திருப்பணி மாலை
  • புராண திருமலை நாதர்- மதுரை சொக்கநாதர் உலா
  • நிம்பை சங்கர நாராயணர் - மதுரைக் கோவை
  • மு.கோவிந்த சாமி ஐயர் - மதுரை மீனாட்சியம்பிகை வெண்பா மாலை
  • சோழவந்தான் அ.சண்முகம் பிள்ளை - மதுரை மீனாட்சியம்பிகை சந்தத் திருவடி மாலை, திருவடிப்பத்து
  • திருப்போரூர் கோபால நாயக்கர் - மதுரை மீனாட்சியம்மன் பதிகம்
  • உ.வே.சாமிநாத ஐயர் - கயற்கண்ணி மாலை, அங்கயற்கண்ணி மாலை, கடம்பவனப்பதிகம், சுந்தரேசுவரர் துதி
  • சு.சபாபதி முதலியார் - மதுரை மாலை
  • காரைக்குடி ராம.சொ.சொக்கலிங்கம் செட்டியார் - சோமசுந்தர மாலை
  • வேலூர் வி.சுப்பையர் - மீனாட்சி பஞ்சகம், மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சகம்
  • வ.சு.செங்கல்வராயப் பிள்ளை - அறுபத்து நான்கு திருவிளையாடல்
  • நூலாசிரியர் பெயர் தெரியாதவை - மதுரை அங்கயற்கண்ணியம்மை கலிப்பா, மதுரை சிலேடை வெண்பா, திருஆலவாயுடையார் பயக்கர மாலை, திருச்சாத்தன நான்மணி மாலை, திருவிளையாடல் கருணை திருவிருத்தம்.

தனிப்பாடல்கள்

  • சேத்திர கோவை பிள்ளைத்தமிழ் - காஞ்சிபுரம் சிதம்பரநாதக்கவிராயர்.
  • இரட்டைப்புலவர்கள் - சொக்கலிங்கம் உண்டே துணை
  • எமனுக்கே பதில் சொல்லும் பாடல்
  • கவிக்களாமேகப் புலவர் பாடியது
  • மு.ரா.அருணாசல கவிராயர் பாடிய வெண்பா
விளம்பரம்
மேலே
விளம்பரம்