மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 1 · பக்கம் 27 · 16 / 159

கிளி வாகனம் ஏன்

மதுரை மீனாட்சி அம்மனின் வலது கையில் கிளி அமர்ந்திருக்கும். கிளி என்பது அன்பு, காதல், நட்பின் அடையாளம். சொக்கநாதர் மீது மீனாட்சி அம்மன் கொண்ட அன்பின் வெளிப்பாடாக கிளி உள்ளது. பக்தர்கள் கூறும் வேண்டுதல்களை கிளியின் மூலம் அம்மன் கேட்கிறாள். அது நம் வேண்டுதல்களை அம்மனின் காதில் சொல்லிகொண்டே இருக்கும். மேலும் கிளிக்கும், மதுரை சொக்கநாதருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்திரன் சாப விமோசனம் பெற கடம்ப வனமாக இருந்த இத்தலத்திற்கு வந்தான். அப்போது சொக்கநாதர் சுயம்பு வடிவமாக எழுந்தருளியிருந்த இடத்தின் மேலே கிளிகள் வட்டமிட்டபடி, அவரது திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு பறந்தன. இதைக் கண்டு ஆச்சரியமடைந்த இந்திரன், சிவ பூஜை செய்து விமோசனம் பெற்றான். இந்திரன் இங்கு சிவ வழிபாடு செய்வதற்கு கிளிகள் வழிகாட்டியதன் அடிப்படையில் மதுரை தலத்தில் கிளி முக்கியத்துவம் பெற்றது. இந்த புராண வரலாற்றின் அடிப்படையில் மீனாட்சி ஆடிமாத திருவிழாவில் கிளி வாகனத்தில் பவனி வருகிறாள். அப்போது தரிசித்தால் விருப்பம் நிறைவேறும்.

விளம்பரம்
மேலே
விளம்பரம்