சிறப்பு மலர் · பகுதி 1 · பக்கம் 28 · 17 / 159
தங்க மழை தருவாள்
உலகத்திற்கே படியளப்பவள் அன்னை மீனாட்சி. அவள் நினைத்தால் தங்க மழையே பெய்யும். ஒரு பெண்ணுக்கு திருமணம் என்றால் விசேசஷமான நகைகள் அணிந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை பக்தர்களுக்கு இருக்காதா! அதனால், மீனாட்சி கல்யாணத்தன்று பிரத்யேகமான நகைகளை அணிவர். அன்று ஒருநாள் மட்டுமே இந்த நகைகளுடன் அம்பாளை தரிசிக்க முடியும். சுவாமிக்கும் நகை உண்டு.
- சுவாமிக்கு, நீல நிற கற்கள் பதித்த கிரீடம், தங்க பூணூல், காதில் மாணிக்கக்கல் பதித்த தோடு, இரு கைகள் முழுக்க ரத்தின அலங்காரம், ஒரு கையில் தங்க பூச்செண்டு, மார்பில் தங்க கவசம், முதுகு, பாதத்தில் தங்கத்தாவடம், கழுத்தில் நீலநிற கல் பதித்த நளபதக்கம் அணிவிக்கப்படும்.
- மீனாட்சியின் கழுத்து முதல் பாதம் வரையில் தங்க அங்கி அணிவிக்கப்படும். சிரசில், தங்க கிரீடம், தங்க கிளி அல்லது தங்க செங்கழுநீர் மலர், வைரத்தாலி (நித்ய சுமங்கலி என்பதால் திருமணத்துக்கு முன்பாகவே இந்த தாலி அணிவிக்கப்படும்).