சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 30 · 28 / 159
பக்தர்களின் கனிவான கவனத்திற்கு...
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை காண வந்திருக்கும் பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்கிறது தினமலர்.
- தங்களது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வையுங்கள். அத்துடன் சைடுலாக் இட்டு கூடுதலாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
- கூட்டத்தில் தங்களது அலைப்பேசி, பொருட்கள், நகைகள், குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
- பொருட்களையோ, குழந்தைகளையோ தவறவிட்டால் அருகில் இருக்கும் காவல் நிலையம், குறைதீர்க்கும் மையங்களுக்கு சென்று தகவல் கொடுங்கள். பதட்டம் வேண்டாம்.
- ஆங்காங்கு வைத்திருக்கும் வண்ணத்திரையிலும் கும்பாபிஷேக நிகழ்ச்சியை பொறுமையாகவும் விழிப்புணர்வுடனும் தரிசியுங்கள்.
- கூட்ட நெரிசலுக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
- உடலில் ஏற்படும் சோர்வு, களைப்பு, திடீர் மயக்கத்திற்கு தற்காலிக மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- கண்ட இடங்களிலும் எச்சில் துப்புவதோ, சிறுநீர்கழிப்பதையோ செய்யாதீர்கள். அதற்குரிய இடங்களை பயன்படுத்துங்கள்.
- சுவாமியை தரிசிக்க வரிசையில் நிற்கும் போது பேசாதீர்கள். முண்டியடித்துக் கொண்டு செல்லாதீர்கள்.
- கோயில் தூண்களில் உள்ள சிலைகளை தொடுவதோ, அதன் மீது விபூதி குங்குமத்தையோ கொட்டாதீர்கள்.
- திருச்சிற்றம்பலம், பொன்னம்பலம், வெள்ளியம்பலம், சிவசிவ, சொக்கா, சொக்கநாதா, ஆலவாயா, அங்கயற்கண்ணியே என சொல்லி அனைவருக்கும் நல்வாழ்வு தருவாயாக என பிரார்த்தனை செய்யுங்கள்.
- கோயிலை வலம் வரும் போது சிவபுராணம், நமச்சிவாய பதிகங்கள், திருவாலவாய் பதிகங்களை பாடியே வலம் வாருங்கள். உங்களுக்கு மனநிம்மதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மீனாட்சி சொக்கநாதரின் அருள் அனைவரும் பெற...
பக்தியுடன் பிரார்த்திக்கிறது