சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 30 · 29 / 159
தமிழ்மாதம் பெயருடைய வீதிகள்
மீனாட்சியம்மன் கோயிலுக்கு பிற கோயில்களில் இல்லாத ஒரு விசேஷம் உண்டு. அதாவது தமிழ் மாதங்களில் நடக்கும் விழாவின்போது சுவாமி, அம்பாள் எந்த வீதிகளில் எழுந்தருளுகிறார்களோ, அந்த வீதி அம்மாதத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஆடி, சித்திரை, ஆவணி, மாசி வீதி என கோயிலைச் சுற்றி நான்கு வீதிகள் இருக்கிறது. இதில் ஆவணி வீதி மட்டும், மூல நட்சத்திரத்துடன் இணைந்து ‘ஆவணி மூல வீதி’ என அழைக்கப்படுகிறது. சிவனின் திருவிளையாடல்களில் ‘பிட்டுக்கு மண் சுமந்த லீலை’ இம்மாதத்தில் நிகழ்ந்தது. எனவே ஆவணி மூலம் நட்சத்திரத்தில் பிட்டுத்திருவிழா இங்கு விசேஷமாக நடக்கிறது. இவ்விழாவின்போது சுவாமி இந்த வீதியை சுற்றி வருகிறார்.